பழனியில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
இதில் கிறிஸ்தவ பாதிரியார்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இந்து ஆன்மீகவாதிகள் என அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
முன்னதாக பழனி டிஎஸ்பி சிவசக்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார்,கவிதா மற்றும் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து தமிழர் திருநாளை கொண்டாடினர். மேலும் காவலர்களின் குழந்தைகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து காவலர்களுக்கு உறியடி போட்டி மற்றும் கயிறு இழுக்கும் போட்டி போன்றவைகள் நடைபெற்றது. இவற்றில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இறுதியாக அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
CATEGORIES திண்டுக்கல்
TAGS சமத்துவ பொங்கல் விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திண்டுக்கல் மாவட்டம்பழனி காவல் நிலையம்பொங்கல் திருநாள் விழா