பவானி நகர அதிமுக சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 58 பேரை பவானி போலீசார் கைது செய்தனர்.
பவானி செய்தியாளர் கண்ணன்.
ஈரோடு மாவட்டம் பவானி நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் அந்தியூர் மேட்டூர் பிரிவில் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்
எம்.எல்.ஏக்கள் பலரை சென்னையில் போலீசார் கைது செய்ததை கண்டித்தும் அவர்களை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மேட்டூர் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வரதராஜ், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், பவானி நகராட்சி கவுன்சிலர் சிவக்குமார்,
மற்றும் கட்சி நிர்வாகிகளான மூர்த்தி, ஆண்டியப்பன், முத்துசாமி, பிரகாஷ், பிரபாகரன் என 8 பெண்கள் உட்பட 58 பேரை பவானி போலீசார் கைது செய்தனர்.