பவானியில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு புறநகர் கிழக்கு அதிமுக மாவட்ட கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னால் அமைச்சரும், பவானி தொகுதி எம்எல்ஏ வுமான கே.சி. கருப்பணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால் விலை உயர்வு, மின்சார கட்டண விலை உயர்வு, ஓ ஏ பி நாளுக்கு நாள் குறைத்து வருவது, மகளிருக்கு வழங்கப்பட்ட ஸ்கூட்டர் திருத்தம், திருமண உதவி தொகை நிறுத்தம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் பவானி ஒன்றிய செயலாளர் தங்கவேலு, பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், பொதுக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி உட்பட பவானி பெருந்துறை தொகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இறுதியாக பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.