BREAKING NEWS

பாஜக ஆர் எஸ் எஸ் குண்டர்களின் வன்முறை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாஜக ஆர் எஸ் எஸ் குண்டர்களின் வன்முறை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் மீது பாஜக ஆர் எஸ் எஸ் குண்டர்களின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து,

 

ராணிப்பேட்டை மாவட்டம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சி.பி.ஐ (எம்) மாவட்ட அமைப்பாளர் தோழர் என்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது.

 

 

தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் வரவேற்றார். வாலாஜா தாலுகா செயலாளர் ஆர்.மணிகண்டன் ஆற்காடு நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.பியாரேஜான் முன்னிலை வகித்தனர்.

சி.பி.ஐ(எம்)மாநில குழு எம்.ராமகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் சி.பஞ்சாட்சரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் E.சார்லஸ் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

 

சி.பி.ஐ (எம்) மாவட்ட குழு பி.ரகுபதி D.சந்திரன் எல்.சி.மணி காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் K.ஆனந்தன் ஆற்காடு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முஜீப் வீ.சி.க. நகர செயலாளர் ப.பாக்யராஜ் தொகுதி செயலாளர் A.சின்னையன் சிபிஐ(எம்) மாவட்ட குழு தா.வெங்கடேசன் S.கிட்டு R.திலகா காங்கிரஸ் கட்சி சார்பில் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS