பாஜக – விடுதலை சிறுத்தைகள் திடீர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு.
![பாஜக – விடுதலை சிறுத்தைகள் திடீர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு. பாஜக – விடுதலை சிறுத்தைகள் திடீர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-06-at-1.35.53-PM.jpeg)
தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது பாஜக – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பாபா சாகேப் அம்பேத்கரின் 65-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செயலுத்தினர்.
இந்நிலையில், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமுது இக்பால் தலைமையிலான கட்சியினர்அவர்களை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், அவர்கள் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் – தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாகம் போலீசார், மோதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து பாஜகவினர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் விடுதலை சிறுததைகள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த சம்பவம் எதிராெலியாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.