பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பவானி அருகில் குட்ட முனியப்பன் கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செங்கோட்டையன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநில செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் குக்கிராமங்களிலும் முழுமையாக கிளைகள் அமைப்பது குறித்தும் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் நியமிப்பது குறித்தும் மற்றும் பல்வேறு கட்சி வளர்ச்சி பணி குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் எஸ்.எல்.பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர்களான எஸ்.பி.வல்லவராயன், ஜம்புலிங்கம், மாவட்ட பொருளாளர் திலகா, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் திருமுருகன், மாவட்ட அமைப்பு செயலாளர் எஸ்.ஏ.சண்முகம், முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன்,
மாவட்ட தொழிற்சங்க பொறுப்பாளர்கள் சேகர், கதிர்வேல், மாவட்ட செயற்கு உறுப்பினர் ரவி, மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் ரேவதி, சாந்தி, நளினி, வேணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அம்மாபேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.