பாபநாசம் தொகுதிக்கு ரூ.297.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து வரும் எம்.எல்.ஏவுக்கு பாராட்டு தெரிவித்து திருமணம்.

தஞ்சை வடக்கு மாவட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர்
பாதுஷா தலைமை தங்கினார் மாநில துணைச் செயலாளர்
உசேன் கனி, மாநில செயலாளர் சரவண பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தலைவராக ஹிபாயதுல்லா, மாவட்ட செயலாளராக முகமது மைதீன், பொருளாளராக பக்ருதீன், தமுமுக மாவட்ட செயலாளராக அப்துல் ரஹ்மான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ;-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன.
குடந்தை மாநகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேன்டும்.
கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவித்திட வேண்டும்
கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையை சிறப்பு பல்நோக்கு
மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தலைமையின் ஆணைக்கினங்க செயல்படுவதுயென்றம்
மது மற்றும் போதைப்பொருள் மற்றும் கள்ள லாட்டரி ஒழிப்பை தமிழக
அரசு தீவிரமாக தடுக்கவேண்டும்
கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் தெருநாய்களின் தொல்லையும் பராமறிப்பு இல்லாமல் இரவு பகல் நேரங்களில் சுற்றி திரியும் மாடுகளை மாநகராட்சி அப்புறப்படுத்த வேண்டும்.
கும்பகோணம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள வணிக கடைகள் ஹேட்டல்கள் பயணிகளுக்கு நிற்பதற்கு உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும் என இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது..
மேலக்காவேரி சுற்றியுள்ள பகுதில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள நகர் நல மருத்துவமனை மிகப்பெரியளவில் கட்டிடம் கட்டப்பட்டும் சரியான மருத்துவர்கள் செவிலியர்கள்
இல்லை.
ஆகையால் அந்த மருத்துவமணையின் தரத்தை உயர்த்தி மருத்துவர்கள் செவிலியர்கள் அதிகப்படுகைகள் மகப்பேறு அறைகள் உடனடியாக அமைக்கவேண்டும்
மேலக்காவேரி பகுதியில் உள்ள 2,3,4 வார்டுகளை தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்…
கொட்டையூர் பகுதில் ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்ட காவேரி ஆற்றில் தடுப்பணையை துரிதமாக கட்டவேண்டும் என இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது
மேலக்காவேரி பகுதில் உள்ள 11 நீர்நிலை குளங்களுக்கு காவேரி ஆற்றிலிருந்து வருகின்ற நீர் வழி தடங்கள் குப்பைகளால் அடைப்பட்டு கிடக்கின்றன. அதை விரைவாக தூர்வாரப்பட்டு நீர் நிலைகளை மேன்படுத்த வேண்டும்.
பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் தொகுதி மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 இன் கீழ் பாபநாசம் தொகுதிக்கு ரூ.297.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்களின் கோரிக்கை அடிப்படையில் பணிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக இந்த பொதுக்குழு சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறது.
பாபநாசம் தொகுதி மேம்பாட்டிற்காக பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் அவர்கள் சட்டமன்றத்திலும் பிற அதிகார அவைகளிலும் குரல் கொடுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
அவர் மேற்கொள்ளும் பணிகளை உடனடியாக அங்கீகரிக்குமாறு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் அதிகாரிகளையும் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில், திருச்செந்தூர் மற்றும் மைசூர் விரைவு ரயில்கள், மீண்டும் நின்று செல்ல, ரயில்வே நிர்வாகம் தாமதப்படுத்தாமல் ஒப்புதல் வழங்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாபநாசம் ஆன்மீக திருக்கோயிகளின் மையமாக உள்ள வட்டமாகும். இவ்வூரை சுற்றி உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலிருந்தும் குறிப்பாக கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரள பகுதியில் இருந்து அதிகமான எண்ணிக்கையில் வரும் பக்தர்கள், பெரும்பாலானோர் ரயில் மார்க்கமாகவே வந்து செல்கின்றனர்.
இதனால், பாபநாசம் ரயில் நிலையத்தின் மூலம் மாதம் ரூ. 11 லட்சமும், ஆண்டுக்கு சுமார் ரூ. 1 கோடியே 58 லட்சம் ரயில் பயணச்சீட்டு, வருவாயாகவும்,
பாபநாசம் ரயில் நிலையம், ரயில்வே நிர்வாகத்தின் அந்தஸ்துடைய அதிக போக்குவரத்து கொண்ட முக்கியமான ரயில் நிலையமாக திகழ்கிறது தற்சமயம், இந்த ரயில் நிலையத்தின் வழியாக செல்லும் தஞ்சாவூர் – சென்னை உழவன் விரைவு ரயில், திருச்சி-சென்னை சோழன் அதி விரைவு ரயில், கோவை மயிலாடுதுறை ஜனசதாப்தி அதி விரைவு ரயில் ஆகியவை பாபநாசத்தில் நின்று செல்கிறது.
ஆனால், ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக நின்று சென்று வந்த மைசூர் மயிலாடுதுறை, திருச்செந்தூர்- சென்னை ஆகிய இரண்டு விரைவு ரயில்களும், கரோனா நோய் தொற்று காலத்திற்கு பிறகு நின்று செல்ல வில்லை.
இந்த ரயில்கள், பாபநாசம் நின்று செல்லாத காரணத்தால் 30 கிலோமீட்டர் பயணித்து தஞ்சாவூர் சென்று, ரயில்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதனால் பயணிகளுக்கு குறிப்பாக முதியோர், மாற்றுத்திறனாளிகள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வோர், போன்றோருக்கு தேவையில்லாத பண விரயமும், கால விரயமும் ஏற்படுவதுடன், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, ரயில்வே நிர்வாகம், திருச்செந்தூர் மற்றும் மைசூர் விரைவு ரயில்கள் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல, உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகத்தை இந்த பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் ராஜ் முஹம்மது, ரஹ்மத் அலி, முஜிபுர் ரஹ்மான், சம்சுதீன், செல்லப்பா, சலீம் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.