பாபர் மசூதி இடிப்பு தினத்தை வழிபாட்டுரிமை பாதுகாப்பு நாளாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தமுமுக-மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தஞ்சை வடக்கு மாவட்ட சார்பில்
தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் கும்பகோணம் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மமக மாநில துணைப்பொதுச்
செயலாளர் தஞ்சை பாதுஷா, மாநில அமைப்பு செயலாளர் ஜெ.ஹமீதுசுல்தான், தலைமை பிரதிநிதி சரவணபாண்டியன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வருகிற டிசம்பர் 6
பாபர் மசூதி இடிப்பு தினத்தை வழிபாட்டுரிமை பாதுகாப்பு நாளாக அறிவிக்க வலியுறுத்தி கும்பகோணம் மாநகரில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
நடைபெறும் என மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு
மமக மாவட்ட செயலாளர் ருசி மைதீன், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான், மாவட்ட பொருளாளர் பொகருதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.