BREAKING NEWS

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அதிர்ச்சி.; தடுப்புச்சுவரால் கடலுக்குள் விழாமல் தப்பிய பேருந்து.

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அதிர்ச்சி.; தடுப்புச்சுவரால் கடலுக்குள் விழாமல் தப்பிய பேருந்து.

பாம்பன் பாலத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

 

 

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வந்த அரசு மற்றும் தனியார் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

 

 

அப்போது பாலத்தின் தடுப்பு சுவரில் தனியார் பஸ் மோதி நின்றது. இதனால் அந்த பஸ் கடலுக்குள் விழுந்து பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விரைந்து வந்து இரண்டு பஸ்களிலும் சிக்கி இருந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

இந்த விபத்தில் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

பாம்பன் பாலத்தில் சுற்றுலா பயணிகள் வரும் பேருந்துகள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது குற்றம் சாட்டப்படுகிறது.

 

 

எனவே, பாலத்தில் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )