பாரம்பரிய உணவுகள் காட்சிபடுத்தி அசத்திய பள்ளி மாணவர்கள்.

மானாமதுரை செவன்த்டே பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழாவில் விதவிதமான உணவுகளை காட்சிபடுத்தி அசத்திய பள்ளி மாணவர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிப்காட்டில் உள்ள செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக்பள்ளியில் பாரம்பரிய உணவுத்திருவிழாவில் பாரம்பரிய சிறுதானிய உணவுகளை காட்சிப்படுத்தி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர்.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஐந்தினை நிலங்கள், இயற்கை விவசாய உரங்கள் மூலம் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் உணவுகள் தொடர்பான உணவுகளை காட்சி படுத்தி பெற்றோர்கள், பொதுமக்களுக்கு விளக்கினர்.

பாரம்பரிய உணவுகள் ரசாயண உரங்கள் பூச்சிமருந்துகள் இல்லாத இயற்கை விவசாயம் குறித்த மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்களுக்கு ஒட்டப்பந்தயம் லக்கிகார்னர் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன இவ்விழாவில் கலந்துகொண்ட பெற்றோர்கள் தாங்கள் கொண்டுவந்த பாரம்பரிய உணவுகளை பள்ளிமாணவர்களுடன் பகிர்ந்து உண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் துரை, பள்ளி தலைமை ஆசிரியர் பால்மலையப்பன், கருவூல அலுவலர் முத்துராஜ், பள்ளி அலுவலர்கள் சீனிவாசன், பட்டுராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர் வி.ராஜா.
