பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது .

நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்குப் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து 729 வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் ஜுபிளண்ட்விழா நடைபெற்றது.

2021-2022 ம் ஆண்டு கல்வி ஆண்டில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் ஜுபிளண்ட்விழா பெற்றோர்கள் முன்னிலையில் APJ அப்துல்கலாம் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் SCAD கல்வி குழுமங்களின் நிறுவனர் முனைவர் கிளிட்டஸ்பாபு,நிர்வாக இயக்குனர் அருண்பாபு ஆகியோர் கலந்துகொண்டு தலைமை உரையாற்றி மாணவர்களையும் பெற்றோர்களையும் பாராட்டி வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகளை வழங்கி கெளரவித்தனர்.

அமேசான்,சோகோ,டிசிஎஸ்,குவால்காம்,ஹெக்சாவெர்,மிராஃபிரா,விப்ரோ,ராகுட்டன்,கார் டெக்னாலஜிஸ்,அட்டோஸ்,கேப் ஜெமினி,ஐ வெய்வ்,நேஷனல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்,இன்போசிஸ்,மைட்பாப்ஸ்,வெப்பராக்ஸ்,சக்தி ஆட்டோ காம்போனென்ட்ஸ்,ரெனால்ட் நிசான்,சிர்மா,ஸுசி,வின்சின்ஃபோ,பேஸ் ஆட்டோமேஷன்,வாப்கோ,நீயாமோ,சிட்டிசன்,க்யூ மேக்ஸ்,விகான் ப்ரோ,டெக் மகேந்திரா,மொபியஸ்,விர்சியுசா,மற்றும் பல முன்னணி நிறுவனங்களில் இருந்து 729 பணி நியமன ஆணைகள் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவ மாணவியர் பெற்றுள்ளனர்.
