BREAKING NEWS

பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 13,495 பேருக்கு இலவச சைக்கிள். வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.

பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 13,495 பேருக்கு இலவச சைக்கிள். வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.

வேலூர்: தமிழகத்தில் அரசு பள்ளி, ஆதிதிராவிடர் பள்ளி, மற்றும் அரசு நிதி உதவிபள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 11-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. தற்போது இந்த மாணவ மாணவிகள் பிளஸ் 2 படித்து வருகின்றனர்.

 

இவர்களுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் தற்போது 84 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 6,348 மாணவர்கள், 7147 மாணவிகள் என மொத்தம் 13,495 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இந்த சைக்கிள்கள் வேலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளன.அவற்றை பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. விரைவில் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )