புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் இளையான்குடி மக்கள் நலக் கூட்டமைப்பினர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ஊருக்கு வெளியே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இதற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், புதிதாக பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தும், இளையான்குடியில் ஊருக்குள் உள்ள தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து, புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.
அதன் சாா்பில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து அங்கு கடையடைப்பு போராட்டம், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம், முதல்வருக்கு ஐந்தாயிரம் தபால்கள் அனுப்பும் இயக்கம் என தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். அதைத் தொடா்ந்து, நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு பேருந்து நிலையம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என போராட்டக் குழுவினரிடம் தெரிவித்திருந்தாா். ஆனால், மீண்டும் இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

