புளியங்குடி பகுதியில் நெட்வொர்க் கிடைக்காததால் கைரேகை பதிவு செய்யும் இயந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் பொங்கல் பரிசு விநியோகம் செய்வதில் சிக்கல்.
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் முழு கரும்பு 1 , பச்சரிசி ஒரு கிலோ ,சீனி ஒரு கிலோ வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது .இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புளியங்குடி பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடையிலும் பொங்கல் பரிசு வாங்குவதற்காக காலை முதல் பொதுமக்கள் காத்திருந்து வருகின்றனர். மேலும் பொங்கல் பரிசு வாங்க வந்திருந்த பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நெட்வொர்க் கிடைக்கவில்லை என்றும் இதனால் கைரேகை பதிவு செய்யும் இயந்திரம் வேலை செய்யவில்லை என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்ததால் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருந்து வருகின்றனர்.
மேலும் 10 நிமிடத்திற்கு ஒரு குடும்ப அட்டை மட்டும் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.மேலும் வேலை கை ரேகை பதிவு செய்யும் இயந்திரம் நெட்வொர்க் கிடைத்தால் மட்டுமே வேலை செய்யும் என்பதால் பொதுமக்கள் நீண்ட நேரமாக வெயிலில் குழந்தைகளுடன் காத்திருந்து வருகின்றனர்.
தங்களது அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமலும் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இன்று பணிக்கு செல்ல முடியாமலும் ரேஷன் கடையிலேயே காத்திருந்து தங்களது நேரத்தை வீணடித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நெட்வொர்க் கிடைக்க வழிவகை செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே நெட்வொர்க் பிரச்சினை தீர்த்து தடையின்றி பொங்கல் பரிசு கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.