பெருமாள் அன்ன முத்திரை பூஜை நடைபெற்றது.

நெல்லை டவுண் ரெங்கநாதபுரம் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பெருமாள் அன்ன முத்திரை பூஜை வெகு விமர்சையாக மூன்று ஆண்டுகள் கழித்து நடைபெற்றது.

பெருமாளுக்கு மந்திரங்கள் முழங்க பாடல்கள் பாடி அன்னாவி பூஜை செய்தார் மேலும் அன்ன முத்திரை விழாவில் கலந்து கொண்ட ஊர் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பெருமாள் கடவுளின் குழந்தைகள் என்று அடிமைபடுத்தி கொண்டனர், பூஜையில் வைத்திருந்த தீர்த்தத்தை அன்னாவி குழந்தைகளுக்கு தொளித்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
CATEGORIES Uncategorized
