BREAKING NEWS

பேரணாம்பட்டு பத்தாவது வார்டில் கிராம சபா கூட்டம்.

பேரணாம்பட்டு பத்தாவது வார்டில் கிராம சபா கூட்டம்.

 

 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு 10 வது வார்டில் சிறப்பு கிராமசபா கூட்டம் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்திற்கு பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

 

நகர மன்ற துணைத் தலைவர் ஆழியார் ஜூபேர் அகமது முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி ஆணையாளர். டி வி சுபாஷினி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெற இக்கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது இதில் . நகர்மன்ற உறுப்பினர். எல். சின்ன லாசர். முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கே. ராஜவேலு, இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் வி. ஜானகி பீட்டர்,

 

திமுக நிர்வாகி. பொன் பொற்கை பாண்டியன், என்கின்ற பி.சின்னா,  முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பி.லாசர் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )