பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பேரணாம்பட்டு. ரோட்டரி சங்கம், குப்பம். பி. இ .எஸ். மருத்துவமனை, பேரணாம்பட்டு. கார்த்திக் எலக்ட்ரானிக்ஸ்,மற்றும் பர்னிச்சர்ஸ் மற்றும். ஜெயம் டிஜிட்டல் இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் ஒன்றை நடத்தினார்.
இம்முகாமை பேரணாம்பட்டு நகர மன்ற துணைத் தலைவர் ஆலியா ஜுபைர் அஹமத் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
மாவட்ட எம்ப்ளாய்மெண்ட் இணை இயக்குனர் கே.செந்தில்குமார், பப்ளிக் இமேஜ் சேர்மன் ஜி. சக்கரவர்த்தி. ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில், இருதய நோய், சிறுநீரக நோய், இடுப்பு, முழங்கால், கிட்டப்பார்வை, முதுகு தண்டு, எலும்பு நரம்பு,..
பெண்கள் நலம், தூரப்பார்வை, விரைவாதம் சர்க்கரை நோய் கர்ப்பப்பை கோளாறு கண் குடலிறக்கம் இரத்த அழுத்தம் கண் சதை வளர்ச்சி, போன்ற நோய்களுக்கு 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரோட்டரி சங்கம் தலைவர் பேராசிரியர் டாக்டர் எம் பிரபாத்குமார் டிடி மோட்டூர் மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ் சிவக்குமார் டாக்டர் பி செந்தில்குமார் ரோட்டரி சங்க நிர்வாகிகளான செயலாளர் ஜி.சாம்ராஜ், பொருளாளர் எம் சுந்தரேசன், பயிற்றுனர் ஜே.ஜாவித், கான் கிளப் சர்வீஸ் எஸ் தவ்பிக் அஹமத் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.