BREAKING NEWS

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : காங்.,அறவழி போராட்டம்!

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : காங்.,அறவழி போராட்டம்!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த கொலைக் குற்றவாளி பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று வியாழக்கிழமை காலை 10 – 11 மணிவரை குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் காந்திய வழியில் வாயில் வெள்ளை துணி கட்டி அறவழி போராட்டம் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் விஜயன் MC, விஜயேந்திரன், வேத மணிமாறன், கோவிந்தராஜ், கோதண்டன், பாரத் நவீன்குமார், சரவணன், உவைஸ் அஹ்மத், மகாலட்சுமி OBC பிரிவு மாவட்ட தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கநாதன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆடிட்டர். கிருபானந்தம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD. விக்ரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்வில் வட்டார தலைவர்கள் ஜோதி கணேசன், செல்வக்குமார் மற்றும் தனசேகர், பெரியசாமி, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முஜம்மில் அஹ்மத், அக்பர் பாஷா, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விஜய் பாபு, ரஜினிகாந்த், மனோகரன், வீரபாண்டியன், நஸ்ருதீன், முஸாக்கீர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல், நவீன் பிரசாத், சூர்யா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். முடிவில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை ஆற்றினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )