பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்ததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை காவல்துறை விசாரணை இன்றி பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்ததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை காவல் சரக எல்லைக்கு உட்பட்ட அருந்தவபுரம் சாலியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் மீது கடந்த மே மாதம் 7 ம் தேதி அதே ஊரைச் சேர்ந்த நபர் புகார் கொடுத்ததின் அடிப்படையில் எந்தவித விசாரணையும் செய்யாமல் மே மாதம் 17ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து அம்மாபேட்டை காவல் துறை சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து அவரது மனைவி மஞ்சுளா காவல் நிலையத்தில் எனது கணவர் எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்றும் கூறியும் கருத்தில் கொள்ளாமல் பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், உடனடியாக சம்பந்தப்பட்ட அம்மாபேட்டை போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சரவணன் மனைவி மஞ்சுளா கோரிக்கை மனுவை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் அலுவலக வெளிப்புற வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். எஸ்.பாலு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.எம். குருமூர்த்தி, தாமரைச்செல்வி ராஜாராமன், வெங்கடேசன், அருந்தவபுரம் கிளை நிர்வாகிகள் காமாட்சி, லதா, சாந்தி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
