BREAKING NEWS

போலீசையே அரிவாளால் வெட்ட முயன்ற இளைஞர் பகீர் பிண்ணனி.

போலீசையே அரிவாளால் வெட்ட முயன்ற இளைஞர் பகீர் பிண்ணனி.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நூறுநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் அருண்குமார். இந்த நிலையில், தன் காவல்நிலைய எல்லைக்கு உட்பட பகுதியான காயங்குளம் சாலையில் வழக்கம்போல் ரோந்துப்பணியில் அருண்குமார் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அருண்குமார் சென்றுகொண்டிருந்த ஜீப்பை ஒருவர் மோட்டர் சைக்களில் பின்தொடர்ந்து வந்தார். இதைக் கணித்த அருண்குமார், அவரிடம் இதுகுறித்துக் கேட்க தன் வாகனத்தை விட்டு இறங்கிய அடுத்த நொடியே, தன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆய்வாளரை அந்த வாலிபர் தாக்க முயன்றார்.

உடனே மின்னல் வேகத்தில் செயல்பட்ட ஆய்வாளர் அருண்குமார், அந்த வாலிபரை கீழே விழச் செய்து, அவர் மேலே ஏறி அழுத்தி, சண்டையிட்டு லாவகமாக அரிவாளைப் பிடுங்கினார். இதற்கிடையே அப்பகுதி மக்களும் குவிந்தனர். தொடர்ந்து ஆய்வாளரை வெட்ட வந்தவருக்கு தர்ம அடி கொடுத்து, போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். கடந்த 12-ம் தேதி, நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )