மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகச்சி.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஜனவரி 30 இன்று மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டும் மற்றும் சுதந்திர வேள்வியில் தன் இன்னுயிர் நீந்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக தியாகிகள் தினத்தை முன்னிட்டும்,
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி பானுமதி தலைமையில் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகச்சி,
புதுக்காடு பகுதியில் உள்ள காந்தியடிகள் சிலை முன்பு நடைபெற்றது இந்த நிகழ்ச்சியினை பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அ.வே.லோகநாதன் ஏற்பாடு செய்தார் உடன் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் மற்றும் தமிழாசிரியர் சம்பத் ஆறுமுகம் உடன் இருந்தார்கள்.
CATEGORIES ஈரோடு
TAGS அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிஈரோடு மாவட்டம்காந்தி 74வது நினைவு நாள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்