மண்டை உடைப்பு, திமுக கொடி கிழிப்பு: களேபரமான கருணாநிதி பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கும் விழா!

தேனி திமுகவில் உட்கட்சிப் பூசலால் கருணாநிதி பிறந்தநாளன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அடிதடி தாக்குதல், மண்டை உடைப்பு. காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் கிளைக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. இதனையொட்டி அப்பகுதியில் உள்ள அருந்ததியர் காலணியில் இலவச சேலை, அன்னதானம் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், இதனை திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தொடங்கி வைப்பதாக இருந்தது.
