மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை இடைதரகர்கள் இன்றி சந்தைபடுத்துதல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை இடைதரகர்கள் இன்றி சந்தைபடுத்துதல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலை அறிவியல் கல்லூரியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நீர்பாசன நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் இடைமுக பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல்நாள் நிகழ்ச்சியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சி கருத்தரங்கு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு தொடங்கி வைத்து விழா உரை நிகழ்த்தினார்.
இதனைதொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் உதவி வேளாண் அதிகாரி ஜெயசீல், மாவட்ட சிறுதொழில் முனைவோர் சங்க திருமூர்த்தி, குழு ஒருங்கிணைப்பாளர் விமல், மண்டல ஆலோசகர் பாண்டியராஜன், வேளாண் அலுவலர் அபிநயா ஆகியோர் கலந்து கொண்டு மஞ்சள், வாழை, பப்பாளி, எண்ணெய் வித்துக்களான எள், நிலகடலை, உள்ளிட்ட வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களின் உறுப்பினர்கள் இடைத்தரகர்கள் இன்றி எவ்வாறு சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.