மதுரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.

துரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.53 கோடி மதிப்பிலான குளத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
பூந்தமல்லி வட்டம் மதுரவாயல் அடுத்த அடையாளம் பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான குளம் ஒன்று இருந்து வந்தது இந்த குளத்தை மூடி சிலர் வணிகப் பயன்பாடு மற்றும் வீடுகள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.
இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரைப்படி ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அடையாளம்பட்டு ஊராட்சி அலுவலர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றினர்.
இதில் ரூ.53 கோடி மதிப்பிலான 1ஏக்கர் 40 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.
மதுரவாயல் காவல் உதவி ஆணையர், ஆய்வாளர், தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரி, தலைமையில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.