மத்திய மாநில அரசை கண்டித்து இரயில்வே நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய மாநில அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நெல்லை சந்திப்பு இரயில்வே நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வேலை வழங்கிடவும் ,தமிழ்நாடு அரசு பணி இடங்களை தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக வழங்கிட வேண்டும் எனவும், ஒன்றிய மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், பகத்சிங் தேசிய வேலை உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரியும், நகர்ப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் கூறினர்.
CATEGORIES Uncategorized
