`மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்’- ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு செல்லூர் ராஜூ திடீர் அழைப்பு.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம் எனவும் தனது செயலுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ்சை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுக அமைப்பு செயலாளர் பதவி பெற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி கேட்காமலேயே எனக்கு கழக அமைப்பு செயலாளராக பதவி வழங்கினார். அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நான் விசுவாசமாக செயல்படுவேன்.
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன். அதிமுக தொண்டரின் புனித ஸ்தலமாக தலைமை அலுவலகம் விளங்குகிறது. அப்படிப்பட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது.
CATEGORIES முக்கியச் செய்திகள்
