மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்பாக கண்டன முழக்கமிட்டனர் .

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் முகம்மது நபி அவர்களை அவதூறாக பேசிய நுபர் சர்மா மற்றும் நவீன் ஜின்டா ஆகிய இருவரையும் UAPA சட்டத்தில் கைது செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் மற்றும் ஜாமி ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் ஒன்றிணைந்து ஜும்மா தொழுகைக்கு பின்பு இருஜமாத்தினரும் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்புகளை முழக்கமிட்டனர் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நாட்டாமை நூர் முகமது.சாகுல்ஹமீது. ஆகியோர் தலைமை தாங்கினார் முகம்மது ஹாதி நன்றியுரையாற்றினார் பின்பு இரு பள்ளிவாசல் பஞ்சாயதினறும் ஒன்றினைந்து குத்தாலம் காவல் நிலையத்தில் இருவர்கள் மீதும் UAPA சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் இம்மனுவை குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் வள்ளி அவர்களிடம் வழங்கப்பட்டது உடன் பேரூராட்சி துணைத்தலைவர் சம்சுதீன் மற்றும் ஜமாத்தார்களும் உடன் இருந்தனர்.
