மயிலாடுதுறையில் உணவு பாதுகாப்பு நாளை முன்னிட்டு ஜோதி பவுண்டேசன் சார்பில் மூன்று வேளை உணவு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜோதி பவுண்டேசன் சார்பில் சாலையோரம் உணவின்றி வாழும் நலிவுற்ற மக்களுக்கு காலை உணவு வழங்கி வருகின்றது அந்த வகையில் செவ்வாய்க்கிழமை உணவு பாதுகாப்பு நாளை முன்னிட்டு மூன்று வேலை மூலிகை உணவு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை நகரம் சித்தர்காடு ரயில் நிலையம் அரசு பெரியார் மருத்துவமனை புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் கச்சேரி சாலை உள்ளிட்ட மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரம் பசியோடு இருக்கும் நலிவுற்ற மக்களுக்கு மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவனர் ஜோதி ராஜன் மூலிகை உணவுகளை காலை மற்றும் மதியம் இரவு மூன்று வேளை வழங்கினார். உண்ணும் உணவை வீணாக்காதீர்கள் மற்றும் இயற்கை உணவை சாப்பிடுவதற்கும் பொதுமக்களிடம் அறிவுரைகள் வழங்கினார் இயற்கை வளங்களை பேணிக் காக்கவும் தண்ணீர் சிக்கனத்தை பற்றியும் கருத்துரை கூறினார்கள்.
ஜோதி பவுண்டேஷன் செய்யும் இச்சேவையை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் பாராட்டுகளை தெரிவித்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதில் ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் செயலாளர் மணிகண்டன் பொருளாளர் செந்தில்நாதன் ஆர் பி செந்தில் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
