மறைமலைநகர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேய பலி.
செய்தியாளர் செங்கைஷங்கர்.
சென்னை பட்டாளம் பகுதியில் இருந்து சபரிமலைக்கு செல்வதற்காக ஒரு வேனில் 17அய்யப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் செங்கல்பட்டு நோக்கி மறைமலை நகர் அருகே சென்ற போது மறைமலைநகர் பெட்ரோல் பங்கிலிருந்து காட்டாங்கொளத்தூர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து.
இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேனிற்கு அடியில் இருசக்கர வாகனத்தோடு சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் பலியான நபர் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த தரணிசிங் என்பவரது மகன் மேகநாதன் (29) என்பது தெரியவந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் மோதிய வேன் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவர்மீது மோதி நின்றது.
வேனில் பயணித்த சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்த பரணிகுமார் என்பவருக்கு கால் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.