BREAKING NEWS

மலேசிய அமைச்சர் தஞ்சையில் பேட்டி தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு தஞ்சை நடுக்கடையை சேர்ந்த வெளிநாட்டு தொழிலதிபர் முகமது எஹியா என்பவர் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்திடும் செறியூட்டிகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.

மலேசிய அமைச்சர்  தஞ்சையில் பேட்டி  தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு தஞ்சை நடுக்கடையை சேர்ந்த வெளிநாட்டு தொழிலதிபர்  முகமது எஹியா என்பவர்  ஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்திடும் செறியூட்டிகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.

தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு தஞ்சை நடுக்கடையை சேர்ந்த வெளிநாட்டு தொழிலதிபர் முகமது எஹியா என்பவர் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்திடும் செறியூட்டிகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.

அதனை அர்ப்பணிக்கும் விழா மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆக்ஸிஜன் செறியூட்டியை மலேசிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் துவக்கிவைத்தார், தஞ்சை ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மலேசிய அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்,

ஆயுதங்களை வைத்திருந்த உலக நாடுகள் கொரோனா தொற்று தீவிரமடைந்த காலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் அல்லல் பட்டன அது போன்ற நிலை மீண்டும் ஏற்படக்கூடாது ஆயுதத்தைத் போன்ற ஆக்ஸிஜனை உற்பத்தி செய்திட வேண்டும் என்றவர்,

தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எதிர்கால தேவைக்கான 100 கட்டில்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறியூட்டியை தஞ்சை நடுக்கடை தொழிலதிபர் முகமது எஹியா அமைத்துக் கொடுத்துள்ளார் அதை மருத்துவமனைக்கு அர்ப்பணித்தோம், என்றவர்,

தமிழகத்தில் இருந்து மலேசியாவில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வைத்துருக்கும் தொழிலதிபர்களை சந்திக்க வந்தேன். இராமநாதபுரம், இராமேஸ்வரம், தஞ்சை ராஜகிரி போன்ற பகுதிகளில் உள்ள மலேசிய தொழிலதிபர்களை சந்திக்க வந்தேன் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்றவர், கம்பம் பகுதியில் மாணவர்கள் கல்வி கற்க மலேசியா இந்தியர்கள் சார்பில் பள்ளிக்கூடம் ஒன்று கட்டிக்கொடுக்க உள்ளோம் என்றவர், தமிழக இளைஞர்களுக்கு மலேசியாவில் உணவகம் மற்றும் மின் கம்பிகள் பொருத்தும் பணிகள் என இரண்டு துறைகளில் பணிகள் வழங்கப்பட்டுள்ளன என்றவர்,

இந்தியாவிற்க்கான மலேசிய தூதர் இன்னும் கூடுதல் துறைகளில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டுள்ளார் இவற்றை மலேசியா அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறினார்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )