மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கையேடு வழங்குதல்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் மன்றம் சார்பாக மாணவர்கள் பொருளியல் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட பொருளியல் கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி அவர்கள் தனது சொந்த செலவில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உண்டான கையேட்டினை மாணவர்களுக்கு வழங்கினார்.
இதனைப் பெற்றுக் கொண்ட பொருளியல் மாணவர்கள் ஆசிரியருக்கு தங்கள் நன்றியினை தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் உடன் இருந்தார்.
CATEGORIES திருநெல்வேலி