மானாமதுரை அரிமண்டபம் கிராமத்தில் மாசி களரி ஸ்ரீ கருப்பண்ணசாமி வீரபத்திர ஆலயத்தில் சிறப்பு பூஜை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அரிமண்டபம் கிராமத்தில் மாசி களரி ஸ்ரீ கருப்பண்ணசாமி வீரபத்திர ஆலயத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் இரவு முழுவதும் கருப்பசாமி அலங்கார பூஜைகள் நடைபெற்ற பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
ஒரு மாத காலம் காப்பு கட்டி விரதமிருந்து கருப்புனின் அருள் பெற்று வருவது வழக்கமாக நடைபெறும்.
அதேபோல் இந்த வருடம் மாசி களரியில கருப்பன் சன்னதியில் காப்பு கட்டி பக்தர்களும் சாமிகளும் அருள் பெற்று மூத்த சாமிகளான அருள்வாக்கு கூறி பொங்கல் வைத்து ஆடுகளின் உதிரம் குடித்து சாமி மூத்த சாமியாக கொண்டு வரக்கூடிய அனைத்து பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் நேத்து கடன் முடிவெடுத்தல் பொங்கல் வைத்தல் கிடா வெட்டுதல் என்று எண்ணற்ற குறைகளையும் கேட்டு அறிந்து கருப்பன் அருள் பெற்று தீபாராதனை காட்டி கருப்பனின் உடை அணிந்து சாட்டை கம்புகளுடன் கோயிலை சுற்றி வந்து அனைத்து பக்தர்களுக்கும் அருள் பெற்றனர்.
பக்தர்கள் இரவு முழுவதும் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பொங்கல் பிரசாதமும் அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவானது வருடத்தின் ஒருமுறை மாசி களரி அப்போது கோயிலின் பங்காளிகள் எந்த வேறுபாடு இன்றி கருப்பனின் சன்னதியில் வந்து அவரவர்களுக்கான நேர்த்திக்கடனை செலுத்தி அருள் பெற்று அருள் பெற்று சென்றனர்.
செய்தியாளர் வி ராஜா.