BREAKING NEWS

மானாமதுரை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவர், மானாமதுரை போலீசார் விசாரணை.

மானாமதுரை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவர், மானாமதுரை போலீசார் விசாரணை.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியண்ணன் வள்ளியம்மை தம்பதியரின் மகன் செந்தில்முருகன் (45) இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். தினமும் இவரது கிராமத்தில் இருந்து மானாமதுரைக்கு ஆட்டோவில் வந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் பீசர்பட்டினம் அருகே வயல்காட்டில் செந்தில்முருகன் என்பவர் இறந்து கிடப்பதாக மானாமதுரை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் தகவல் தெரிந்து அவரது உறவினரும் குடும்பத்தார்களும் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு வந்தனர் இதைத் தொடர்ந்து எனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக மனைவி மற்றும் அவரது உறவினர்களும் கிராம மக்களும் சரியான தீர்வு கிடைக்கும் வரை மருத்துவமனை வளாகத்தை விட்டு செல்ல மாட்டோம் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இறந்த செந்தில்முருகனின் உடலை வாங்க மறுத்துள்ளனர் இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஈடுபட்டு வருகின்றன. ஆட்டோவில் செல்ல கூடியவர் எப்படி சாலை ஓரத்தில் இல்லாமல் 3 விவசாய நிலத்தை தாண்டி கிடப்பது உறவினர்கள் இடையே சந்தேகம் ஏற்பட்டது.எப்படி இவர் கிட்டத்தட்ட 100 மீட்டருக்கு அப்பால் இருந்தது என செந்தில்முருகனின் உடல் அவ்வளவு தொலைவில் இருப்பது எப்படி என காவல்துறையிடம் வாக்குவாதம் செய்தனர்.
சம்பவம் குறித்து மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )