மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மௌனமாய் ஒழித்த போராட்டம். தமிழக அரசு செவி சாய்க்க கோரிக்கை.

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில், அரசு மற்றும் தனியார் அலுவலங்கங்களில், வேலைவாய்ப்பில் முன்னூரிமை வழங்க வேண்டும், வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும்.
மாதாந்திர உதவி தொகையாக ரூபாய் 3 ஆயிரம் வழங்க வேண்டும், வாரிசு அடிப்படையில் காதுகேட்காத மாற்று திறானாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும், அவர்கள் சொந்தமாக தொழில் முனைவராக உயர்வதற்கு, அரசு சார்பில் ஆவின் பாலகம்அமைத்து தர வேண்டும்.
அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவிக்க சைகை மொழி ஆசிரியர் இடங்களை ஏற்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காதுகேளாத மாற்று திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே தங்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.