மீண்டும் குறையத் தொடங்கிய தங்கம்!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!
மீண்டும் குறையத் தொடங்கிய தங்கம்!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!
சர்வதேச சந்தையில் விலை நிலவரத்தை பொறுத்து தமிழகத்தில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக பங்குச் சந்தைகள் வீழ்ச்சியால் கடும்பொருளாதார சரிவு ஏற்பட்டு வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலை அதிகரித்தது. மே 3ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாடப்பட்டது. அட்சயதிரிதியை முன்னிட்டு அன்றைய மற்றும் அடுத்த நாள் என 2 நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.856 குறைந்தது.
இதனால், அட்சயதிரிதியை அன்று நகை விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. மே 18ம் தேதி தங்கம் விலை கிராம் ரூ.4739க்கும், சவரன் ரூ.37,912க்கும் விற்பனை செய்யப்பட்டது. மே19ம் தேதி தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.16 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், சவரம் ரூ.38,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. மே 20ம் தேதியும் கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,793க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,344க்கும் விற்பனை செய்யப்பட்டது.