BREAKING NEWS

முதன் முறையாக தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணி!! குவியும் பாராட்டுக்கள்!!

முதன் முறையாக தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணி!! குவியும் பாராட்டுக்கள்!!

தாமஸ் கோப்பை

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில்  கலந்து கொண்டு வெற்றி பெற்ற இந்திய அணியினரை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டி அவர்களை கௌரவித்தார்.தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி தகுதி பெற்று கலந்து கொண்டது. இப்போட்டியில் கலந்து கொண்ட இந்தோனேசிய அணி ஏற்கனவே 14 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த முறை அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இந்திய அணியினர் திறமையாக விளையாடி கோப்பையை தட்டிச் சென்றனர்.

இந்தோனேசிய அணியை எதிர்த்து போட்டியிட்ட இந்திய பேட்மிண்டன் அணி 3க்கு பூஜியம் என்ற கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக தாமஸ் கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.இந்த வெற்றிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினரை நேரில் அழைத்து கவுரவித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி. அவர் பாராட்டி பேசும்போது, ‘‘இது மிகப்பெரிய சாதனை. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்கிற எண்ணம் நம் நாட்டின் புதிய வலிமையாக மாறி உள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க நம் அரசு தயாராக உள்ளது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவிகளை இந்த அரசு எப்போதும் செய்யும்’’ என்று குறிப்பிட்டார்.

முதல்முறையாக தாமஸ் கோப்பையை வெற்றி பெற்றதுடன் சேர்த்து பிரதமர் மோடியும் அழைத்து வாழ்த்தி கவுரவித்தது இந்திய வீரர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்துச் சென்றுவிட்டது.ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய நாட்டின் சார்பில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் மொத்தம் 33  பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். அவற்றில் 13 தங்கம், 15 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் அடங்கும். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )