BREAKING NEWS

மோட்டூர் கிராமத்தில் புளிய மரத்தில் இருந்த விஷ வண்டு கடித்து இரண்டு பேர் படுகாயம்..

மோட்டூர் கிராமத்தில் புளிய மரத்தில் இருந்த விஷ வண்டு கடித்து இரண்டு பேர் படுகாயம்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் சொக்கநாதபுரம் கிராமத்திற்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் சாலையோர புளிய மரத்தில் விஷ வண்டு கூடுகட்டி இருந்ததை அறியாமல் அப்பகுதியில் விவசாயி சின்னசாமி மற்றும் அவரது மகள் இருவரும் விவசாயத் தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

 

 

மேலும் விஷ வண்டு திடீரென விவசாயி சின்னசாமி மற்றும் அவரது மகள் இருவரையும் கடித்ததால் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில்,

 

 

தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் செல்லபாண்டியன் தலைமையிலான தீயணைப்பு படை யினர் உடனடியாக அப்பகுதிக்கு வந்து சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் புளிய மரத்திலிருந்து விஷ வண்டு கூட்டை தண்ணீர் பீச்சி அடித்து அழித்தனர்.

 

பின்னர் விஷ வண்டு தாக்கிய இருவரையும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )