ரயில் ஜங்ஷன் முன்பு ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடைக்கு பூமி பூஜை.

கரூர் : கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரயில்வே ஜங்ஷன் முன்பு ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. எம்.பி. ஜோதிமணி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
கரூர் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரத்தினம் சாலையில் கரூர்ரயில் நிலைய சந்திப்பு (ஜங்ஷன்) முன்புறம் ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் செ.ஜோதிமணி எம்.பி. பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் மெய்ஞானமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன், முன்னாள் நகரத்தலைவர் சுப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், காங்கிரசார் கலந்து கொண்டனர்.
