BREAKING NEWS

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் எம்பி ஜோதிமணி ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கினார்.

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் எம்பி ஜோதிமணி ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கினார்.

ராகுல் காந்தியின் 54 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வெள்ளியணை ராகவேந்திரா இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கரூர் எம்பி ஜோதிமணி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தையுடன் தரையில் அமர்ந்து உணவு உட்கொண்டார் தொடர்ந்து அங்குள்ள குழந்தைகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்
கரூர் மாநகர் தலைவர் வெங்கடேஸ்வரன் மற்றும் வடக்கு நகர செயலாளர் ஸ்டீபன் பாபு உள்பட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS