ரூ. 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அனுசியா பிரசவ விடுதி கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை பவானி கூடல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பவானி, சீனிவாசபுரம் பகுதியில் உள்ள (அனுசுயா பிரசவ விடுதி) அனுசுயா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பிரசவ அறை கூடுதல் கட்டிடம் கட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பவானி நகராட்சி நிதி ரூ. 10.50 லட்சம் மற்றும் பவானி கூடல் ரோட்டரி சங்க நிதி ரூ. 10.50 லட்சம் என 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பிரசவ அறை கட்டப்பட முடிவு செய்யப்பட்டு,
அதன் பணிகள் துவங்கின. இதனைத் தொடர்ந்து பிரசவ அறை கட்டுமான பணிகளை பவானி கூடல் ரோட்டரி சங்க தலைவர் அண்ணாதுரை பொருளாளர் தவமணி மற்றும் சங்க நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்