BREAKING NEWS

ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை.

ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் கடத்தூர் ஊராட்சி கடத்தூர் புதூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் படி ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் தொடக்கப் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலோடு கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கமலவேணி கலையரசு தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினரும் கடத்தூர் ஊராட்சிக் கழகச் செயலாளருமான கு. கலையரசு ஊராட்சி மன்ற துணை தலைவர் அப்துல் பாரூக் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரேமா காளிமுத்து கனி சாம்புகன் மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )