ரூபாய் நோட்டுக்களில் காந்தி படத்திற்கு பதிலாக வேறு தலைவர்கள் படங்கள்?! ஆர்பிஐ அதிரடி!!
![ரூபாய் நோட்டுக்களில் காந்தி படத்திற்கு பதிலாக வேறு தலைவர்கள் படங்கள்?! ஆர்பிஐ அதிரடி!! ரூபாய் நோட்டுக்களில் காந்தி படத்திற்கு பதிலாக வேறு தலைவர்கள் படங்கள்?! ஆர்பிஐ அதிரடி!!](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-06-at-4.42.24-PM.jpeg)
இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் மகாத்மா காந்தியின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சுதந்திரத்திற்கு பிறகு வழக்கமாக இடம் பெற்று வருகிறது. மகாத்மா காந்தியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு 1969-ம் ஆண்டில் டிசைன் சீரிஸ் வெளியிடப்பட்ட போது அவரது படம் முதன்முதலில் இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பிரிண்டிங் அண்டு மிண்டிங் கார்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனமும், மகாத்மா காந்தி, ரவிந்திரநாத் தாகூர், அப்துல் கலாமின் படங்களை கொண்ட இரண்டு தனித்தனி ரூபாய் நோட்டு மாதிரிகளை டெல்லி ஐஐடி பேராசிரியர் திலிப் ஷகானிக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில், எதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பரிந்துரைக்க கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
![](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-06-at-4.42.47-PM-650x515.jpeg)
2017-ம் ஆண்டில், புதிய வரிசை ரூபாய் நோட்டுகளுக்கான புதிய பாதுகாப்பு அம்சங்களைப் பரிந்துரைப்பதற்காக உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் உள் கமிட்டிகளில் ஒன்று, 2020-ல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் ரூபாய் நோட்டுகளில் காந்தியைத் தவிர, தாகூர் மற்றும் கலாமின் வாட்டர்மார்க் விவரங்களும் இருக்க வேண்டும் என்று முன்மொழிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாற்றாக பிற தலைவர்களின் படம் இடம்பெறும் என்ற தகவலுக்கு ஆர்பிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.காந்தியின் படம் மாற்றப்படாது, அவ்வாறு மாற்ற வேண்டும் என எந்த கோரிக்கையும் வரவில்லை. ரூபாய் நோட்டுக்களில் காந்தி படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.