வனத்துறை என்று ஒன்று இருக்கிறதா? தீயணைப்பு துறையினர் பாம்பு பிடிப்பதா?

வேலூர் மாவட்டம் ,
காட்பாடி அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர் காட்பாடி தீயணைப்பு துறையினர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கல்புதூர் ராஜலிங்கம் நகர் 2வது தெருவில் வசித்து வரும் மாதவன் என்பவரது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு புகுந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் மாதவன் உடனடியாக காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன், பால்பாண்டி மற்றும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டிக்குள் இருந்த நல்ல பாம்பை உயிருடன் மீட்டு அருகில் உள்ள காப்பு காட்டிற்குள் பத்திரமாக விட்டனர். வனத்துறை என்று ஒரு துறை இருக்கிறதா என்று தெரியவில்லை. தண்ட சம்பளம் வாங்கும் வேலையை வனத்துறையினர் பார்க்கின்றன ர். தொடர்பு இல்லாத தீயணைப்புத் துறை பாம்பு பிடிக்கும் துறையாக மாறி வருகிறது. வனத்துறை நடவடிக்கை படு கேவலமாக இருக்கிறது. போன் செய்தால் வனத்துறை ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆரோக்கியமானது அல்ல. இதை மாவட்ட வனத்துறை அலுவலர் கண்டு கொள்ளாமல் இருப்பதே இப்படி நடக்கிறது. இனியாவது வனத்துறை ஊழியர்கள் திருந்தி தங்கள் பணியை சிறப்பாக செய்வார்களா? இல்லை எருமை மீது மழை பெய்தது போன்று கண்டும் காணாமல் விட்டு விடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.