வரட்டு பள்ளம் சோதனைச் சாவடி அருகே பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனை.

செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பர்கூர் சாலையில் வரட்டுப்பள்ளம் சோதனை சாவடி அருகே பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி சுகந்தி மற்றும் அந்தியூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

இதில் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு வந்த லாரி 2 டெம்போ 1 மினி ஆட்டோ 2 ஆகியவைகளை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழகத்திற்குள் இயங்க உரிய அனுமதியின்றியும்,
எப்.சி. இன்றியும் இயங்கி வந்த நான்கு வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
CATEGORIES Uncategorized
