வரட்டுப்பள்ளம் அணை உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வரட்டுப்பள்ளம் அணை உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை 33.46. கொள்ளளவு கொண்டதாகும் தற்பொழுது வரட்டுப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது தற்பொழுது அணையின் நீர் இருப்பு 31.85 உள்ளது அணைக்கு நீர்வரத்து 134 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் வரட்டுப்பள்ளம் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் அணையின் உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
