BREAKING NEWS

வாழப்பாடி அருகே இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மற்றும் கோயிலுக்கு சார்ந்த சொத்துக்களை மீட்டுத்தர கோரி பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை.

வாழப்பாடி அருகே இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மற்றும் கோயிலுக்கு சார்ந்த சொத்துக்களை மீட்டுத்தர கோரி பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை.

 

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அனுப்பூர் கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செல்லியம்மன், சென்றாய பெருமாள் மாரியம்மன் கோவில் உள்ளது.

 

இந்த கோவிலுக்கு சொந்தமான 52 ஏக்கர் நிலம் 573 புளிய மரங்கள் சாமிக்கு அலங்கரிப்பதற்காக பொதுமக்கள் காணிக்கையாக அளித்த 169 சவரன் நகை இவை அனைத்தையும் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அவரே பராமரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர், இதற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

 

மேலும் இந்த மூன்று கோவிலையும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கோவிலும் கோவில் சொத்துக்களை மீட்டு சிதலமடைந்த கோவிலை சீரமைத்து தர அனைத்து பொதுமக்களும் கோவிலில் தரிசனம் செய்ய வழிவகை செய்யக்கோரி கோரிக்கை வைத்துள்ளனர்

 

மேலும் 52 ஏக்கர் நிலத்தை பொதுமக்கள் பார்வைக்கு முன் ஏலத்தில் விட்டு விவசாயிகள் வாழ்வாதாரம் பெருக வழிவகை செய்து தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இன்று ஏலம் விட கோவில் நிலங்களை ஏலம் விட வந்த இந்து அறநிலையத் துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏலத்தை மறு தேதிக்கு ஒத்தி வைக்குமாறு வலியுறுத்தினர்.

 

இதில் ஊர் மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதனால் சற்று நேரம்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )