BREAKING NEWS

வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சிகளில், சொத்துவரி, மின்கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சிகளில், சொத்துவரி, மின்கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் 18 மாத கால திமுக, ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும்,

 

அ.தி.மு.க. சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று அனைத்து பேரூராட்சிகளிலும், 13 ந்தேதியன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14.12.2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த அதிமுக, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்திருந்தார்.

 

அதனடிப்படையில் இன்று சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சி பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விடியா தி.மு.க. அரசைக் கண்டித்தும்.

 

 

உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக வினர் கோஷங்கள் எழுப்பினர் .ஏராளமான அதிமுக மகளீர் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சிகளின் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வாழப்பாடி ஒன்றிய அதிமுக செயலாளர் வழக்குரைஞர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் என்.சிவக்குமார், வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர். ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா முன்னிலை வகித்தார்.

 

 

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆட்சி காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எவ்வித வரிகளும் உயர்த்தப்படவில்லை. ஆனால், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழகத்தில் எவ்வித மக்கள் நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.

 

 

சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர் வரும் தேர்தலில், வாக்காளர்கள் திமுகவிற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்’ என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )