விசிக திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார் அறிக்கை.
விசிக திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார் அறிக்கை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க எதிர்வரும் மே 29 ஆம் தேதி மதுரையில் மாலை 03:00 மணியளவில் நடைபெற இருக்கின்ற செஞ்சட்டை பேரணிக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் மாநில, மாவட்ட, நாடாளு மன்ற தொகுதி, சட்ட மன்ற தொகுதி, நகர ,ஒன்றிய, பேரூராட்சி ,முகாம் நிர்வாகிகள் கட்சியின் துணைநிலை அனைத்து அணிகளின் நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டுமாய் திருப்பூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகளை கேட்டுக்கொள்கிறேன்.பேரணியில் கலந்து கொள்ள இருக்கின்ற அனைத்து நிர்வாகிகளும் மற்றும் தோழர்கள் கட்டாயமாக
செஞ்சட்டை அணிந்து பங்கேற்க வேண்டும்.கட்டுப்பாடுகளுடன் அமைதியாகவும் பேரணியை வெற்றிபெற செய்ய உதவுமாறும் திருப்பூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
