விருதுநகர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் வராத ரூ.6.68 லட்சம் பறிமுதல்.

போன வருஷமும் இதே நாளில்தான் ரெய்டு!
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டட தரைத்தளத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் இயங்குகிறது. மாவட்டத்தில் 450 ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி, திட்ட பணிகளில் ஒப்பந்ததாரர்களிடம் பணி ஆணை வழங்க லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமாசங்கர் அறையில் நுழைந்த போது அவரது பையில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 68 ஆயிரம் இருந்தது. அதை பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
அங்கிருந்த ஊழியர்களிடமும் சோதனையிடப்பட்டது. இரவு முழுவதும் சோதனை நடந்தது. உதவி இயக்குனர் வீட்டிலும் சோதனை நடத்தப்படும் என தெரிவித்தனர்.
CATEGORIES விருதுநகர்
TAGS குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்ரூ.6 லட்சத்து 68 ஆயிரம்கணக்கில் வராத பணம்விருதுநகர் ஊராட்சி லஞ்சம் பணம் பறிமுதல்