விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 கால் பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் திருட்டு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை செம்பருத்தி நகர், மல்லிகை தெருவில் வசிக்கும் கட்டிட மேஸ்திரி கொளஞ்சியானந்தன் என்பவர் நேற்று மாலை தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய சொந்த ஊரான ரூபாய் நாராயண நல்லூர் கிராமத்திற்கு குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை மல்லிகைப்பூ தெருவில் உள்ள வீட்டிற்கு கொளஞ்சி ஆனந்தன் வந்து பார்த்தபோது பூட்டி இருந்த வீட்டு கதவின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பிரோவில் இருந்த 8 கால் பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் ரொக்க பணம் திருடிச்சென்றது தெரியவந்த நிலையில் மங்களம்பேட்டை போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செம்பருத்தி நகர் பகுதிகளில் உள்ள தெருக்களில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் இருட்டாத காட்சியளிப்பதால் அப்பகுதிக்குவந்து செல்பவர்கள் யார் என்று அறிய முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.
மேலும் அப்பகுதியில் மின்விளக்குகள் வசதி செய்து தர பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.